கள்ளத்தொடர்பை கை விட்டதால் வாலிபரை கத்தியால் குத்திய அதிமுக பெண் நிர்வாகி கைது

கள்ளத்தொடர்பை கை விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் வாலிபரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற அ.தி.மு.க. பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானல் அன்னை தெரசாநகரைச் சேர்ந்தவர் பிரமிளா (வயது 44). அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியான இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். முதல் கணவர் இறந்து விட்டார்.

2-வதாக ராஜேஸ் என்பவரை திருமணம் செய்து இவர்களுக்கும் ஒரு குழந்தை உள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேசும் இறந்து விட்டார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் (வயது 24) என்ற டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதை அறிந்த பிரதீப்பின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதை அறிந்த பிரமிளா ஆத்திரமடைந்து தன்னை விட்டு பிரியக் கூடாது என்றும், திருமணம் செய்யக்கூடாது என்றும் பிரதீப்புடன் தகராறு செய்தார்.

இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பிரமிளா கத்தியால் பிரதீப்பை சரமாரியாக குத்தினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரதீப் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பிரதீப்பின் தாய் ரூபி ஸ்டெல்லா கொடுத்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்குபதிவு செய்து பிரமிளாவை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com