தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கூடுதல் பொறுப்பு

மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் சமீப காலமாக பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சில நாட்களுக்கு முன் தமிழக. பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டார்.  

இந்நிலையில்,  தமிழக ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். 

மேலும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com