பரமக்குடியில் சின்னத்திரை நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது

பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னத்திரை நடிகை ரேவதிக்கு ஆண் குழந்து பிறந்துள்ளது.
நடிகை ரேவதி
நடிகை ரேவதி
Published on

பரமக்குடி:

நாதஸ்வரம், கல்யாண வீடு உள்ளிட்ட தொடர்களிலும் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தவர் ரேவதி.

இவருக்கு 6 வருடங்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த தாமோதரனுடன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ரேவதிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதனைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் ரேவதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com