போதைப்பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் அஜாஸ் கான் கைது

ஷாதாப் பாரூக் ஷேக் என்ற போதைப்பொருள் வியாபாரியுடன் அஜாஸ் கான் தொடர்பில் இருந்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகர் அஜாஸ் கான்
நடிகர் அஜாஸ் கான்
Published on

மும்பை:

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில், சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி, அவரது தம்பி சோவிக் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணை மற்றும் சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது. 

அவ்வகையில் பாலிவுட் நடிகர் அஜாஸ் கான் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அஜாஸ் கான் ராஜஸ்தானில் இருந்து நேற்று இரவு மும்பை திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் அவரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அழைத்துச் சென்று தனியிடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு போதைப் பொருள் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். 

அந்தேரி மற்றும் லோகண்ட்வாலா பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது, அஜாஸ் கான் வீட்டில் இருந்து போதை மாத்திரைகள் கிடைத்ததாக  போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஷாதாப் பாரூக் ஷாயிக் என்ற போதைப்பொருள் வியாபாரியுடன் அஜாஸ் கான் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்து.

கடந்த வியாழக்கிழமை ஷாதாப் பாரூக் ஷாயிக் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட மெபெட்ரோன் என்ற போதை மருந்து 2 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com