தஞ்சை அருகே விபத்தில் வாலிபர் பலி

தஞ்சை அருகே ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள திருக்கானூர்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 31). இவர் மோட்டார் சைக்கிளில் வல்லம் - ஆலக்குடி சாலையில்சென்ற போது ஆலக்குடியை சேர்ந்த சுதா-ரவிச்சந்திரன் தம்பதியினர் ஸ்கூட்டரில் சென்றுள்ளனர். அப்போது ஸ்கூட்டர் மீது பூமிநாதன் மோட்டார் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்த பூமிநாதன், ரவி, சுதா ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர்.

மூவரையும் மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பூமிநாதன் சிகிச்சை பலனின்றி இறந்தார். ரவி, சுதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வல்லம் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com