மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

வில்லாபுரத்தில் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை மிரட்டல்
தற்கொலை மிரட்டல்
Published on

மதுரை:

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் உள்ளது.

இந்த நிலையில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் செல்போன் கோபுரத்தில் ஏறி நின்றுகொண்டு, “என் மனைவி பிரிந்து சென்று விட்டார். அவரை மீண்டும் என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். இல்லையெனில் குதித்து தற்கொலை செய்து கொள்வேன்” என்று கூச்சலிட்டார்.

இதனை கேட்ட பொது மக்கள் திரண்டு வந்தனர். இது குறித்து கீரைத்துறை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் துரை பாண்டியன் சம்பவ இடத்துக்கு வந்தார். அவர் அந்த வாலிபரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

குடிபோதை வாலிபரை மீட்கும் வகை யில் தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக் கப்பட்டு உள்ளனர்.

போலீசாரின் விசார ணையில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கண்ணன் என்பது தெரிய வந்தது.

இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

வாழ்க்கையில் விரக்தி அடைந்த கண்ணன் செல் போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

வில்லாபுரம் செல்போன் கோபுரத்தில் ஏறிய வாலிபர் குடிபோதையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com