சமயபுரம் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பிளஸ் 2 மாணவன் பலி

சமயபுரம் அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி மாணவன் பலியானார்.
விபத்து
விபத்து
Published on

சமயபுரம்:

சமயபுரம் அருகே உள்ள சிறுமருதூரை சேர்ந்தவர் சோழராஜன். இவரது மகன் ஸ்ரீகாந்த் (வயது 18). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் உள்ள தம்பிரான்படுகை என்ற இடம் அருகே சென்றபோது, நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. 

இதில், படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார். இதுகுறித்து சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com