கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விவசாயி பலி

கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கரூர்:

கரூர் அருகே உள்ள வேடிச்சி பாளையத்தை சேர்ந்தவர் அழகேசன் (வயது 44). விவசாயி இவர், நேற்று முன்தினம் இரவு நெரூரில் இருந்து வேடிச்சி பாளையத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வேடிச்சி பாளையம் தாளத்துறை வாய்க்கால் பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே கோரை புற்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று அழகேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அழகேசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் வாங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அழகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com