ஆலங்குளம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 9 மாத குழந்தை உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 9 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது 9 மாத ஆண் குழந்தை சர்வேசுக்கு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென்று வயிற்றுப்போக்கால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக குழந்தையை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்று நள்ளிரவு குழந்தைக்கு மீண்டும் காய்ச்சல் வந்துள்ளது. மீண்டும் குழந்தையை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், எந்த வகை காய்ச்சல் என்பதை கணிக்க முடியாததால், அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மர்மக்காய்ச்சலுக்கு குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com