தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருட்டு

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 9 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

தஞ்சை:

தஞ்சாவூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் முரளிராஜா கிருஷ்ணன் (வயது40). இவர் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் அவர் பணிக்கு சென்றுள்ளார். அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு கடைதெருவிற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கும் போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே கணவர் முரளிராஜா கிருஷ்ணாவுக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுபற்றி தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com