தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகளை திருடிய வாலிபர் கைது

தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

தஞ்சை:

தஞ்சாவூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் விஜயானந்த். இவரது மனைவி வனிதா (வயது 36). இவர் கடந்த 12ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவின் லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் வனிதா புகார் கொடுத்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த ராமசந்திரன் மகன் வடிவேல் என்பவரை இன்ஸ்பெக்டர் பிராங்வின் உட்ரோவில்சன் கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com