கோப்பு படம்
கோப்பு படம்

ஈராக்: ஐஎஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் - பாதுகாப்பு படையினர் உள்பட 9 பேர் பலி

ஈராக் நாட்டில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
Published on

பாக்தாத்:

ஈரான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐஎஸ், அல்கொய்தா, தலிபான் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையாக ஈரான் பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். அரசுப்படையினருக்கு ஆதரவாக ஆயுதம் தாக்கிய பல குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

மேலும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் ஈராக் நாட்டில் தங்கள் படைத்தளங்களை அமைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இதனால், பயங்கரவாத குழுக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டிரிட் நகரின் சௌயா என்ற பகுதியில் உள்ள சாலையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் கண்ணிவெடியை மறைத்து

வைத்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த அரசுப்படையினரின் வாகனம் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியது. 

வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து அங்கு மறைந்திருந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரின் வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் அரசு ஆதரவு

படையினர், போலீசார், பொதுமக்கள் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com