தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த மூதாட்டி பலி

கோவை சின்னவேடம்பட்டியில் தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த 85 வயதான மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மரணம்
மரணம்
Published on

கோவை:

கோவை சின்னவேடம்பட்டி சக்திநகரை சேர்ந்தவர் சாந்தலிங்கம். இவரது மனைவி லட்சுமி(85). இவர் தனது மகன் மகாலிங்கம் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று லட்சுமி வீட்டில் இருந்த ஆசிட்டை தண்ணீர் என நினைத்து குடித்து விட்டார்.

இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறித்துடித்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com