75 சதவீதம் முடிவடைந்தன- அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகள் தீவிரம்

அத்திக்கடவு -அவினாசி குடி நீர் திட்டப்பணிகள் கடந்த 1½ ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் 75 சதவீதம் முடிவடைந்துள்ளன.
அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகள்
அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகள்
Published on

அவினாசி:

திருப்பூர் ,கோவை ,ஈரோடு ஆகிய மூன்று மாவட்டத்தை சேர்ந்த 50 லட்சம் மக்களின், 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு -அவினாசி குடி நீர் திட்டப்பணிகள் கடந்த 1½ ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக 6 நீரேற்று நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. 6-வது நீரேற்று நிலையம் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குன்னத்தூ ராம்பாளையத்தில் கட்டப்பட்டு வருகிறது .

இதுகுறித்து அத்திக்கடவு திட்டம் பொறியாளர்கள் கூறுகையில், பவானி ஆற்றில் ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ் புறத்தில் இருந்து ஆண்டுக்கு 1.5 டி.எம்.சி. உபரிநீர் நீரேற்று முறையில் நிலத்தடியில் பதிக்கப்பட்ட குழாய் வாயிலாக கோவை ,திருப்பூர் ,ஈரோடு மாவட்டங்களில் உள்ள 1044 குளம் குட்டைகளில் நிரப்பப்பட உள்ளது.

இதன் வாயிலாக 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலம் பயன்பெற வாய்ப்புள்ளது. இதுவரை 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக அடுத்த மாதம் திருப்பணை மற்றும் முதல் மூன்று நீரேற்று நிலைகளில் பணி முடிந்து பெருந்துறை பகுதியில் உள்ள 60 குளம் குட்டைகளில் நீர் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை 1537 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. அவினாசி தொகுதியில்,அவினாசி ஒன்றியத்தில் 255 குளம் குட்டைகளும்,அன்னூர் ஒன்றியத்தில் 156 குளம் குட்டைகளும் என 441 குளம் குட்டைகளில் இத்திட்டத்தின்படி நீர் நிரப்பப்பட உள்ளது. இதன் வாயிலாக 9480 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். அன்னூரில் உள்ள நீரேற்று நிலையத்தில் 37 சதவீதகட்டிட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கூடிய விரைவில் மீதமுள்ள பணிகளும் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com