கோவையில் ரூ.7 லட்சம் மதிப்பில் தங்க கட்டி வாங்கி மோசடி - ஊழியர் மீது வழக்கு

கோவையில் ரூ.7 லட்சம் மதிப்பில் தங்க கட்டி வாங்கி மோசடியில் ஈடுபட்ட ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கோவை:

கோவை ஆர்.எஸ்.புரம் ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் மோகனன்(வயது48).

இவர் அதே பகுதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவரிடம் கடந்த மாதம் 12-ந் தேதி மோகனன் 250 கிராம் தங்கக் கட்டியை கொடுத்து நகை ஆபரணமாக செய்து தருமாறு கொடுத்தார். இதனை பெற்றுக் கொண்ட தங்கராஜ் நகைகளை செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதுகுறித்து மோகனன் அவரிடம் கேட்டபோது தனது உறவினர் இறந்துவிட்டதால் சொந்த ஊருக்கு சென்று விட்டதாக கூறினார்.

பின்னர் வேலைக்கு வந்த அவரிடம் மோகனன் தங்க நகைகளை கொடுக்குமாறு கேட்டார். அதற்கு அவர் 80 கிராம் நகை மட்டும் திருப்பிக் கொடுத்தார் மீதமுள்ள ரூ.7 லட்சம் மதிப்பிலான 170 கிராம் தங்க நகைகளை கொடுக்காமல் மோசடி செய்தார். இதுகுறித்து மோகனன் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com