கடந்த 3 ஆண்டுகளில் 7 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் ஊழல் புகாரில் கைது

கடந்த 3 ஆண்டுகளில், 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஊழல் புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி:

கடந்த 3 ஆண்டுகளில், 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஊழல் புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் மத்திய பணியாளர் நலத்துணை இணை மந்திரி ஜிதேந்திர சிங் இதை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து இதை சொல்கிறேன். அதுபோல், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இதுவரை ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி, குற்றவியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உத்தரபிரதேசத்தில் பணியாற்றி வந்தார். தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மாநில அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com