ரூ.1 கோடி மதிப்பிலான முந்திரி லாரி கடத்தல்: முன்னாள் அமைச்சர் மகன் உள்பட 7 பேர் கைது

ராசிபுரம் அருகே கத்தி முனையில் ஓட்டுநரை மிரட்டி முந்திரி ஏற்றி வந்த லாரி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் மகன் ஜெயசிங் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
முன்னாள் அமைச்சர் மகன் உள்பட 7 பேர் கைது
முன்னாள் அமைச்சர் மகன் உள்பட 7 பேர் கைது
Published on

சென்னை:

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில், லாரி ஒன்றில் ரூ1.10 கோடி  மதிப்பிலான 12 டன் எடை கொண்ட முந்திரி லோடு ஏற்றி கொண்டு ஜப்பான் நாட்டிற்கு செல்வதற்காக, தூத்துக்குடி துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், லாரி டிரைவரை , மிரட்டி லாரியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கொடுக்கப்பட்ட  புகாரின் பேரில், லாரியை போலீசார் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

இதனை தெரிந்து கொண்ட  அந்தக் கும்பல் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை  அடுத்த மேட்டுக்காடு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு தப்பிச் சென்று விட்டனர். பின்னர் லாரியை கைப்பற்றிய போலீசார், நடத்திய விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் ஜெபசிங், உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com