ஆட்டோ, கார்களில் பேட்டரி திருடிய 7 பேர் கைது - 2 பேருக்கு வலைவீச்சு

பணகுடி அருகே ஆட்டோ, கார்களில் பேட்டரி திருடிய 7 பேரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பணகுடி:

பணகுடி, காவல்கிணறு, வடக்கன்குளம் சுற்றுவட்டார பகுதிளில் உள்ள கார்கள், ஆட்டோக்கள், டிராக்டர்களில் இரவு நேரத்தில் தொடர்ந்து பேட்டரிகள் திருடப்பட்டு வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது தலைமையில் தனிப்படையினர் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். இதில் பேட்டரிகளை திருடி வந்த கும்பல் சிக்கியது. பேட்டரி திருடியதாக காவலகிணறு பகுதியைச் சேர்ந்த சுந்தரம் மகன் லட்சுமணன் (வயது 20), மார்த்தாண்டம் ஜோசப் மகன் அகஸ்டின் (20), கோட்டயம் மோகன் மகன் எது மோகன் (21), பணகுடி கோபாலகிருஷ்னன் மகன் சதீஷ்ராஜ் (21), பணகுடி நம்பி மகன் விக்னேஷ் (21), தண்டையார்குளம் சுப்பிரமணியன் மகன் கவுதம் (19), பணகுடி அருள்ராஜன் மகன் சுமில் (21) ஆகிய 7 பேரையும் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது கைது செய்தார். அவர்களிடம் இருந்து 12 பேட்டரிகள் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 7 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பேட்டரி திருட்டில் தொடர்புடைய பூதப்பாண்டியை சேர்ந்த தனேஷ், ஆரல்வாய்மொழியை சேர்ந்த நிர்மல் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com