மது, புகையிலை பொருட்கள் விற்ற 63 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் மது, புகையிலை பொருட்கள் விற்றதாக 63 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 40 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 302 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி மாவட்டம் முழுவதும் பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 23 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com