துறையூரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 6 பேர் கைது

துறையூர் பகுதியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 6 நபர்களை தனிப்படையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது
கைது
Published on

துறையூர்:

துறையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கும் சமூக விரோதசெயல்கள் பற்றி மத்திய மண்டல காவல் துறைத்தலைவர் பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல்சென்றது. இதனையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் துறையூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது துறையூர்- சொரத்தூர் பிரிவு சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றினை திடீர் சோதனை செய்தனர். சோதனையில் ஹோட்டலில் பதுக்கி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 18 மதுபாட்டில்கள், 200 கிராம் கஞ்சா, 43 பான்மசாலா பாக்கெட்டுகள், பட்டாக்கத்தி ஒன்று, 2 மோட்டார் சைக்கிள் மற்றும் பணம் 61,710 ஆகியவற்றை கைப்பற்றி ஹோட்டல் கடை உரிமையாளர் அடிவாரத்தை சேர்ந்த வினோத்குமார் (27) என்பவரை கைது செய்தனர்.

இதேபோன்று துறையூர் சின்னஏரிக்கரை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றினை திடீர் சோதனை செய்த போது அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 20 மதுபாட்டில்கள், மது விற்ற பணம் 25,340, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு கடை உரிமையாளர் வசந்தா (49), ஊழியர் கண்ணன் (32) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் அதே கடையில் அமர்ந்து ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த துறையூர்விநாயகர் தெருவை சேர்ந்த தீபக் ராஜ் (30),அருண்ராஜ் (27), சிவக்குமார் (38ஆகிய மூவரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 5 செல்போன், பணம் 21,700 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். துறையூர் பகுதியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 6 நபர்களை தனிப்படையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com