அவினாசியில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

அவினாசியில் பெண்ணிடம் 5 பவுன் நகையை மர்ம ஆசாமி பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செயின் பறிப்பு
செயின் பறிப்பு
Published on

அவினாசி:

ஈரோடு மாவட்டம் நல்லகவுண்டம்பாளையம் ஈஸ்வரமூர்த்தி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி முருகேஸ்வரி (வயது39). இவர்கள் இருவரும் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக அவினாசி அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திருமண மண்டபத்திற்கு செல்வதற்காக ரோட்டை கடக்க காத்திருந்தனர்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம ஆசாமி முருகேஸ்வரி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துச் சென்றார். 

இது குறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com