பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் விற்ற 44 பேர் கைது

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் விற்ற 44 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவிட்டார். அதன்படி தஞ்சை நகரில் கிழக்கு, மேற்கு, தாலுகா,தெற்கு, மருத்துவக்கல்லூரி, தமிழ்ப்பல்கலைக்கழகம்,வல்லம் ஆகிய போலீஸ் நிலைய போலீசார் அந்தந்த பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அதில் 14 கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெற்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்கள் விற்ற 14 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் போலீசார் மேற்கொண்ட சோதனையில் ஒரத்தநாடு பகுதியில் 3 கடைகள், பட்டுக்கோட்டை பகுதியில் 5 கடைகள், திருவையாறு பகுதியில் 3 கடைகள், தஞ்சை புறநகர் பகுதிகளான மெலட்டூர், கபிஸ்தலம், ஆகிய பகுதியில் தலா 2 கடைகள், கும்பகோணம் பகுதியில் 5 கடைகள், திருவிடைமருதூர் பகுதியில் 10 கடைகள் என 30 கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அதில் அந்த கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 30 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com