குஜராத்தில் சோகம் - கட்டுமான பணியில் சுவர் இடிந்து 4 தொழிலாளர்கள் பலி

குஜராத்தின் சூரத் நகரில் கட்டுமான பணியில் சுவர் இடிந்ததில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து நடைபெற்ற இடம்
விபத்து நடைபெற்ற இடம்
Published on

சூரத்:

குஜராத்தின் சூரத் நகரில் கட்டிடம் கட்டுமான பணி ஒன்று நடைபெற்று வந்தது.  இதில், பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் திடீரென கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது.  இந்த சம்பவத்தில், தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.  பலர் காயமடைந்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  இதில், சுவர் இடிந்ததில் சிக்கி உயிரிழந்த 4 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com