கோவையில் ஆசிரியையிடம் 4 பவுன் நகை பறிப்பு

கோவையில் மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் 4 பவுன் நகையை 2 வாலிபர்கள் பறித்து சென்றனர்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

கணபதி:

கோவை ஆவாரம்பாளையம் இ.பி. காலனியை சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய மனைவி தீபா(வயது 40). ஆசிரியை. இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் மொபட்டில் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர். 

தீபாவின் அருகில் சென்றதும், அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க நகையை பறித்துவிட்டு அந்த வாலிபர்கள் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com