கோட்டூர் அருகே ஆடுகளை திருடிய 4 பேர் கைது

கோட்டூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லோடு வேனில் ஆடுகளை திருடி வந்த 4 பேரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கோட்டூர்:

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள பெருகவாழ்ந்தான் போலீசார் சித்தமல்லி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் லோடு வேனில் 4 ஆடுகள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் சந்தேகமடைந்த போலீசார் வேனில் இருந்த4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் பெருகவாழ்ந்தான் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(வயது23), கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சிலுக்குராஜ்(23), நாகர்கோவிலை சேர்ந்த நிஷாத்(22), கோவையை சேர்ந்த சுந்தர்(25) என்றும் இவர்கள் ஆடுகளை புத்தகரம் பகுதியில் இருந்து திருடி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 4 பேரையும் கைது செய்து லோடு வேன் மற்றும் ஆடுகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com