பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ்- வாலிபருக்கு வலைவீச்சு

பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ் செய்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திண்டிவனம்:

திண்டிவனம் அடுத்த கொணக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி செல்வி (வயது 48). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த போது, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ,வந்தார். அவர், செல்வியிடம் உங்கள் வீட்டில் உள்ள பிரச்சினைகள் அகற்ற பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய, செல்வி தனது வீட்டு பிரச்சினைகளை அந்த வாலிபரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து பரிகாரம் செய்வதற்காக நகைகள் வேண்டும் என்று அந்த வாலிபர் தெரிவித்தார்.

இதையடுத்து செல்வி, 3 பவுன் நகையை எடுத்து கொடுத்தார். அப்போது வாலிபர், அருகில் உள்ள கோவிலுக்கு சென்று பூஜை செய்து வந்துவிடுகிறேன், அதற்குள் நீங்கள் குளித்துவிட்டு, வீட்டை சுத்தம் செய்து வையுங்கள் என்று கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த வாலிபர் வரவில்லை. இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டு இருப்பது செல்விக்கு தெரியவந்தது.

இது குறித்து அவர் ரோஷணை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு, நூதன முறையில் நகைகளை அபேஸ் செய்து சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com