

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தநிலையில், 2-ம் கட்ட வாக்குப்பதிவு 30 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அவற்றில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் அடங்கும். அங்கு அவருக்கு எதிராக பா.ஜனதா சார்பில் முன்னாள் மந்திரி சுவேந்து அதிகாரி களம் காண்கிறார். மேற்கு வங்க மாநிலத்தில் 30 தொகுதிகளில் 19 பெண்கள் உள்பட 171 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.