2-வது திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண், வாலிபருடன் மாயம்

கோவை அருகே 2-வது திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண், வாலிபருடன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2-வது திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண், வாலிபருடன் மாயம்
2-வது திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண், வாலிபருடன் மாயம்
Published on

கோவை:

கோவை கணபதி அருகே உள்ள காந்தி மாநகரை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். அதன்பிறகு இளம் பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

அடிக்கடி இரண்டு பேரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். மேலும் வாலிபர் உடனான காதலை கைவிடுமாறு அறிவுறுத்தினர்.

மேலும் மதுரையை சேர்ந்த திருமணமாகி மனைவியை இழந்த வாலிபர் ஒருவரை இளம்பெண்ணுக்கு திருமணம் செய்வது என முடிவு செய்தனர். இதனால் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் இருந்த இளம்பெண் தனக்கு நடக்க இருக்கும் திருமணம் குறித்து தனது காதலனிடம் தெரிவித்தார். அவர் உடனடியாக இளம் பெண்ணை அழைத்துச் சென்று அந்த பகுதியில் உள்ள கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் அவரை திருமணம் செய்தார். பின்னர் இளம்பெண் எதையும் காட்டிக் கொள்ளாமல் தனது வீட்டிற்கு திரும்பிச் சென்றார். இந்த விவகாரம் இளம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அவரை வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது, வாலிபருடன் பேசக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் பெற்றோருக்கு தெரியாமல் தனது 4 வயது பெண் குழந்தையுடன் இரண்டாவதாக திருமணம் செய்த வாலிபருடன் ஓட்டம் பிடித்தார்.

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர்கள் புகார் அளித்தனர் அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com