நெல்லை மாவட்டத்தில் 21 துணை தாசில்தார்கள் இடமாற்றம்

மானூர் மண்டல துணை தாசில்தார் புஷ்பராணி, மானூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், அம்பை தேர்தல் பிரிவு குமார், நெல்லை மண்டல துணை தாசில்தாராகவும், நாங்குநேரி சுப்பிரமணியன், கலெக்டர் அலுவலக ‘ஈ’ பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
இடமாற்றம்
இடமாற்றம்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் வருவாய் துறையில் நேரடி கலந்தாய்வு மூலம் 21 துணை தாசில்தார்களுக்கு இடமாற்றம் அளிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி சேரன்மாதேவி தாலுகா தேர்தல் தனித்துணை தாசில்தார் செல்லத்துரை, நாங்குநேரி வட்ட வழங்கல் அலுவலராகவும், அம்பை மண்டல துணை தாசில்தார் மாரிசெல்வம், நெல்லை கலெக்டர் அலுவலக ‘ஜெ’ பிரிவு தலைமை உதவியாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மானூர் மண்டல துணை தாசில்தார் புஷ்பராணி, மானூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், அம்பை தேர்தல் பிரிவு குமார், நெல்லை மண்டல துணை தாசில்தாராகவும், நாங்குநேரி சுப்பிரமணியன், கலெக்டர் அலுவலக ‘ஈ’ பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

அதன்படி நெல்லை கலெக்டர் அலுவலக தேர்தல் தனித்துணை தாசில்தார் வைகுண்டம் கலெக்டர் அலுவலக ‘க’ பிரிவு தலைமை உதவியாளராகவும், சுத்தநகல் பிரிவு கண்காணிப்பாளர் பிரிட்டோ ஹெலன், நெல்லை தாலுகா தேர்தல் பிரிவு தனித்துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு மொத்தம் 21 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com