மேலூர் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி 20 பேர் காயம்

மேலூர் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

மேலூர்:

சென்னையிலிருந்து சிவகாசி நோக்கி ஆம்னி பஸ் இன்று காலை 4 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.

மேலூர் அருகே சிவகங்கை சாலை சந்திப்பு என்ற இடத்தில் வந்து கொண்டிருக்கும் போது முன்னால் கிராவல் அள்ளிச் சென்ற லாரி மீது ஆம்னி பஸ் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி பஸ் முன்பக்க நொறுங்கியது. லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. ஆம்னி பஸ்சில் பயணம் செய்தவர்கள் கூக்குரலிட்டனர்.

விபத்து குறித்து தகவலறிந்த மேலூர் தீயணைப்பு படை நிலைய அலுவலர் பொறுப்பு ராமராஜன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை போராடி மீட்டனர்.

பலத்த காயமடைந்த 5 பேரை மதுரை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர் .இந்த விபத்தில் பஸ்சில் சென்ற நாகேந்திரன் 37 காரல்மார்க்ஸ், பாண்டி, கார்த்திக், ஆனந்தி உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

மேலூர் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்து, விபத்திலிருந்து காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com