திண்டுக்கல் அருகே கழுத்தை அறுத்து 2 வாலிபர்கள் தற்கொலை

திண்டுக்கல் அருகே கழுத்தை அறுத்து 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஸ்ரீதர் (வயது 32). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். மேட்டுப்பட்டியில் இருந்து மொட்டனம்பட்டி செல்லும் சாலையில் தேவாலயத்தின் பின்புறம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் வேலை இல்லாத விரக்தியில் கடந்த சில நாட்களாக மனச்சோர்வுடன் காணப்பட்ட ஸ்ரீதர் பிளேடால் தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்திநகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் விஜயகுமார் (40). இவர் சம்பவத்தன்று ஒட்டன்சத்திரம் ரெயில் நிலைய வளாக பகுதியில் கழுத்தை தனக்குத்தானே கத்தியால் அறுத்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com