சோபியான் என்கவுண்டர்- 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் முனிஹால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இன்று காலை அப்பகுதிக்கு சென்று பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.

அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com