ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருர் நடத்திய என்கவுண்டரில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாராமுல்லா என்கவுண்டர்
பாராமுல்லா என்கவுண்டர்
Published on

ஜம்மு:

ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் வானிகாம் பயீன் கிரீரி பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து கூட்டாக அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பாதுகாப்புப் படையினருருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் இன்று மாலை 6 மணி அளவில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

தொடர்ந்து நீடித்த சண்டையில், அடுத்த ஒரு மணி நேரத்தில் மற்றொரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளான்.

சுமார் 12 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த சண்டையில் இதுவரை 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களது உடல்களை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு உள்ளதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com