தற்கொலை
தற்கொலை

தேனி அருகே நோய் கொடுமையால் 2 பேர் தற்கொலை

தேனி அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
Published on

தேனி:

தேனி அருகே உத்தமபாளையம் சின்ன ஓவுலாபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி மனைவி செவ்வந்தி (வயது51). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

செவ்வந்திக்கு முதுகுதண்டுவட பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்தார். சம்பவத்தன்று வலி அதிகரிக்கவே பூச்சி மருந்து குடித்து மயங்கினார். இதையடுத்து தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கம்பம் அண்ணாபுரத்தை சேர்ந்தவர் ராசு (80). இவர் தனது குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார். ஊத்துக்காடு சாலையில் உள்ள தோப்பில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இந்த நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள நிழற்குடையில் அவர் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது மகன் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com