தஞ்சை அருகே தொழிலாளி வீட்டில் 2 பவுன் நகை திருட்டு

தஞ்சை அருகே தொழிலாளி வீட்டில் 2 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த நா.வல்லுண்டாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணராஜன் (வயது 56). தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு பொய்யுண்டார் கோட்டையில் உள்ள இவரது மகள் இறந்து விட்டார் என தகவல் கிடைத்தது. இதைகேட்டு மணராஜன் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து பதட்டத்தில் வீட்டை பூட்டாமல் சென்றனர்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகையை திருடி கொண்டு சென்றனர். இந்நிலையில் மகளின் இறுதி சடங்கு முடிந்து வீட்டுக்கு வந்த மணராஜன் பீரோவை பார்த்தபோது அதில் இருந்த நகை திருடு போனது தெரிய வந்தது.

இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலை கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com