எல்லையில் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் பதிலடி... பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் (கோப்பு படம்)
எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் (கோப்பு படம்)
Published on

ஸ்ரீநகர்:

பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி, காஷ்மீர் எல்லையில் அவ்வப்போது அத்துமீறலில் ஈடுபடுகிறது. எல்லையில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகளை குறிவைத்து சிறிய ரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்படுகிறது. இதில் இரு தரப்பிலும் சேதம் ஏற்படுகிறது.

இந்நிலையில், நவ்ஷேரா செக்டாரில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், பாகிஸ்தான் தரப்பில் 2 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com