பணகுடியில் நகை திருடிய 2 பேர் சிறையில் அடைப்பு

பணகுடியில் ஆசிரியர் வீட்டில் நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

பணகுடி:

நெல்லை மாவட்டம் பணகுடி துணை மின்நிலையம் அருகே உள்ள வைஷ்ணவி கார்டன் பகுதியசை் சேர்ந்தவர் துரை (வயது 54). இவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறாா். கடந்த ஆண்டு இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 35 பவுன் தங்க நகைகள் திருடிச் சென்றனர். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது மற்றும் போலீசார் துணை மின் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி வந்த 2 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் துரை வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் லெப்பைகுடியிருப்பை சேர்ந்த சேகர் (33), மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த ரவி (35) என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து உருக்கிய 20 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com