கரூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

கரூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கரூர்:

கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஈரோடு சாலை அருகில் உள்ள முனியப்பன் கோவில் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த காரை போலீசார் சோதனை செய்தனர். 

அப்போது அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 4 கிலோ விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை வைத்திருந்த கரூர் வேலுச்சாமி புரத்தைச் சேர்ந்த மணி (வயது 38), சேது (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்களுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com