டீக்கடையில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

டீக்கடையில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

புதுச்சேரி:

புதுவை பிள்ளைத் தோட்டம் பெரியார் சிலை அருகே ஒரு டீக்கடையில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் தலைமையில் போலீசார் அந்த டீக்கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள கல்லாப்பெட்டியில் 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் இருந்தன.

இதையடுத்து போலீசார் அந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து டீக்கடை உரிமையாளரான பிள்ளைத்தோட்டம் சின்னசந்து பகுதியை சேர்ந்த தாமோதரன்(வயது52) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இவர் அதேபகுதியை சேர்ந்த தனது கூட்டாளியான டோனி என்பவருடன் சேர்ந்து செல்போன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் மற்றும் போலீசார் தாமோதரன் மற்றும் டோனி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் லாட்டரி விற்பனை ரூ.760 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com