சேலம் மாவட்டத்தில் 2வது நாளாக அதிரடி- மேலும் 183 ரவுடிகள் கைது

சேலம் மாநகர் மற்றும் புறநகர் என மாவட்டம் முழுவதும் 2 நாட்களில் நடந்த வேட்டையில் 333 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
கைது
Published on

சேலம்:

நெல்லை, திண்டுக்கல், மதுரை, சேலம் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடந்த கொலைகளை அடுத்து ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

அதன்படி சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் நஜ்மல் ஹோடா, துணை கமி‌ஷனர் மோகன்ராஜ் தலைமையில் போலீசார் ரவுடிகளின் வீடுகளுக்கே சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை 75 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் நேற்றிரவு முதல் இன்று காலை வரை நடந்த தொடர் வேட்டையில் 44 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் மாநகரில் மட்டும் 2 நாளில் 119 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே போல சேலம் புறநகரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் தலைமையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை தேடுதல் வே ட்டையில் ஈடுபட்ட போலீசார் 75 ரவுடிகளை கைது செய்தனர். பின்னர் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நடந்த வேட்டையில் 139 ரவுடிகளை கைது செய்தனர். இதனால் 2 நாட்களில் சேலம் புறநகரில் 214 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாநகர் மற்றும் புறநகர் என மாவட்டம் முழுவதும் 2 நாட்களில் நடந்த வேட்டையில் 333 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரவடிகள் வேட்டை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com