தர்மபுரிக்கு அரவைக்காக 1,700 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

திருவாரூரில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக சரக்கு ரெயிலில் 1,700 டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.
நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரியில் ஏற்றியபோது எடுத்தபடம்.
நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரியில் ஏற்றியபோது எடுத்தபடம்.
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரெயில்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று திருவாரூர் சுற்றி உள்ள பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் 45 பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் 1,700 டன் நெல் தர்மபுரி மாவட்டத்திற்கு அரவைக்காக திருவாரூரில் இருந்து சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com