கடலூரில் திருமணத்துக்கு சிறுமியை கடத்த முயன்ற வாலிபர் கைது

கடலூரில் 17 வயது சிறுமியை திருமணத்துக்கு கடத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கடலூர்:

கடலூரை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 10-ந்தேதி முதல் காணவில்லை என அவரது பெற்றோர் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சிறுமியை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். அதன்படி முதுநகர் மணிக்கூண்டு பஸ்நிறுத்தம் அருகே போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சிறுமியுடன் சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணைணயில் அவர் காணாமல்போன சிறுமி என்பதும், அந்த வாலிபர் தர்மபுரி அருகே தொப்பூரை சேர்ந்த பிரபு (வயது 23) என்பதும், இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து பிரபு மற்றும் அந்த சிறுமியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் பிரபுவுக்கு முகநூல் மூலம் சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிரபு அந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குபதிவு செய்து பிரபுவை கைது செய்தனர். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com