மதுரை அருகே இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தம்- 5 பேர் கைது

மதுரை அருகே 17 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திருமங்கலம்:

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள சின்னாரெட்டிபட்டி கிராமத்தில் இளம்வயது திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் கருப்பாயிக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் அந்த கிராமத்திற்கு சென்று பார்த்தபோது ராஜேஷ் என்பவருக்கும், திருமண வயதை எட்டாத 17 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்வது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து பேரையூர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மணமகன் ராஜேஷ், தந்தை வேலுச்சாமி, தாய் பிச்சைமணி, பெண்ணின் தந்தை ராமர், அவருடைய மனைவி சுமதி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com