நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 145 பேர் கைது

நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 145 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி கஞ்சா, குட்கா, லாட்டரி, மணல், சாராயம், கள் மற்றும் மது விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து தனது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன்பேரில் நேற்று வரை 145 பேர் போலீஸ் சூப்பிரண்டை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து இருந்தனர்.

இதையடுத்து உடனடியாக தனிப்படைகள் முடுக்கிவிடப்பட்டு சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 11 பேரும், குட்கா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரும், மது விற்பனையில் ஈடுபட்ட 87 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

மணல் கடத்தலில் ஈடுபட்ட 24 பேர் மீதும், லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 17 பேர் மீதும், சாராயம் காய்ச்சிய ஒருவர் மீதும் என மொத்தம் 145 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடைபெறுவது தொடர்பாக தகவல் கிடைத்தால் பொதுமக்கள் உடனடியாக 94981 11190 என்ற எண்ணில் அழைத்தோ அல்லது வாட்ஸ்-அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தெரிவித்து உள்ளார். மேலும் மீண்டும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com