இந்திய ராணுவம் பதிலடியில் பலியான பாகிஸ்தானிய வீரர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் பலியான பாகிஸ்தானிய வீரர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

ஜம்மு:

ஜம்மு மற்றும் காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைகள் மற்றும் நிலைகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.  பூஞ்ச், கெரான் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.

ஜம்மு காஷ்மீரின் இருவேறு பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். உரி எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடந்த பதிலடியில் பலியான பாகிஸ்தானிய வீரர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், காயமடைந்த பாகிஸ்தானிய வீரர்களின் எண்ணிக்கையும் 16 ஆக உயர்ந்துள்ளது என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் காயமடைந்த இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் இந்திய ராணுவத்தினரின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆனது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com