ரேஷன் அரிசி பதுக்கல் 2 பேருக்கு 1 வருடம் ஜெயில்- விருதுநகர் கோர்ட்டு தீர்ப்பு

ரேஷன் அரிசியை பதுக்கிய 2 பேருக்கு 1 வருடம் ஜெயில் தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு தீர்பபு வழங்கியது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

விருதுநகர்:

விருதுநகர் முத்துராமன் பட்டியை சேர்ந்தவர்கள் ராஜமாணிக்கம் மற்றும் மாரியப்பன் ஆகியோர் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் ரேஷன் அரிசி பதுக்கியதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவர்களிடமிருந்து 21 மூடை ரேஷன்அரிசியை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கிைன விசாரித்த இந்நகர் முதல் மாஜிஸ்திரேட்டு மருதுபாண்டி, குற்றம் சாட்டப்பட்ட மாரியப்பன் மற்றும் ராஜ மாணிக்கத்துக்கு தலா ஒரு வருடம் ஜெயில் தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com