மகாராஷ்டிரா: தானேவில் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலி

தானேவில் அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒருவர் பலி
ஒருவர் பலி
Published on

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள உள்காஸ்நகர் பகுதியில் ஐந்து அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் 5-வது மாடியின் படுக்கை அறையில் இருந்து மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து நான்காவது மாடியில் விழுந்தது. இதன் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த சக குடியிருப்பு வாசிகள் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர், குடியிருப்பின் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தானே நகராட்சி மண்டல பேரிடர் மேலாண்மை பிரிவின் தலைவர் சந்தோஷ் கடம் கூறியதாவது: -

நேற்று இரவு 10 மணியளவில், நான்காவது மாடி படுக்கை அறையில் ஐந்தாவது மாடிமேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில், படுகாயம் அடைந்த நரேஷ்லால் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த கட்டிடம் 1995-96-ம் ஆண்டில் கட்டப்பட்டது. இங்கு 15 குடியிருப்புகள், 4 கடைகள் உள்ளன. கட்டிடத்தின் தரம் வலுவிழந்து இருக்கலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள அனைவரையும் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

இவ்வார் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com