கார் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறும் மத்திய மந்திரி 4 நாளில் டிஸ்சார்ஜ் ஆகிறார்

கர்நாடகத்தில் கார் விபத்துக்குள்ளானதில் காயம் அடைந்து சிகிச்சை பெறும் மத்திய மந்திரி ஸ்ரீபாத நாயக் இன்னும் 4 நாளில் டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீபாத நாயக்
மத்திய ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீபாத நாயக்
Published on

பனாஜி:

மத்திய ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீபாத நாயக் (வயது 68), கடந்த 12-ந் தேதி கர்நாடகத்தில் கார் விபத்துக்குள்ளானதில் காயம் அடைந்தார். இதனால் அவர் கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல்நிலை தேறி வரும் அவர் நேற்று பத்திரிகையாளரிடம் பேசினார்.

“நான் நீண்ட நாட்களுக்கு பின்பு இன்றுதான் (நேற்று) கண்திறந்து பார்க்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் பிரார்த்தனை மற்றும் கடவுள் அருளால் நான் மீண்டு வருகிறேன். நான் இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ ஆகிவிடுவேன்” என்று ஸ்ரீபாத நாயக் கூறி உள்ளார்.

அவர் நலமாக இருப்பதாகவும், மருத்துவமனை வார்டில் இருந்து சக்கர நாற்காலியில் வெளியில் சென்று திரும்புவதாகவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com