

யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 21-9, 21-16 என்ற நேர் செட் கணக்கில் 42 நிமிடங்களில் தாய் ஜூ யிங்கை (சீனதைபே) தோற்கடித்து மகுடம் சூடினார். ஆண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் லாங் அங்குசை (ஹாங்காங்) வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.