

புதுடெல்லி:
நாடு முழுவதும் 2 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட நாய்கள் 1,415 குதிரைகள் காவல்துறையினருக்கு சேவை செய்து வருவதாக சமீபத்திய புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் காவல் துறையில் அதிக பட்சமாக குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து மராட்டியம் மற்றும் உத்தர பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான மோப்ப நாய்கள் பணியில் இருப்பதாகவும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒட்டு மொத்தமாக 3 ஆயிரத்து 867 விலங்குகள் காவல்துறைக்கு சேவை செய்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் மோப்ப நாய்கள் மற்றும் குதிரைகள் என மொத்தம் 226 விலங்குகள் காவல்துறைக்கு பணியாற்றி வருகின்றன.